2025 ஜூலை 23, புதன்கிழமை

ரயில்- பஸ் மோதி விபத்து; அறுவர் காயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், ரொமேஸ் மதுசங்க

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் ரயிலுடன் இ.போ.சபை பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து, வவுனியா – செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில், நேற்று (04) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் - மெனிக்பாம் நோக்கிச் சென்ற இ.போ.சபை பயணிகள் பஸ் ஒன்று,  மெனிக்பாம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில், மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பஸ் சாரதி உட்பட அதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சாரதி கவலைக்கிடமான நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து குறித்து செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற ரயில் கடவை, பாதுகாப்பற்ற ரயில் கடவை எனத் தெரிவித்து குறித்து ரயிலை செல்ல விடாது அப்பகுதி மக்கள் அதனை மறித்து வைத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் பொலிஸார், அப்பகுதியில் பாதுகாப்பு கடவைக்கு இருவரை நியமிப்பதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து, மக்கள் ரயிலை செல்ல அனுமதித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .