Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 03 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண சபை, வவனியா மாவட்ட செயலகம் மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வவுனியா, வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கான மக்கள் குறைகேள் நடமாடும் சேவை, எதிர்வரும் 16ஆம் திகதி செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் மாகாண, மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள திணைக்களங்களின் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில், செட்டிகுளம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராசா, முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் சண்முகப்பிரியன், பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் சேவைக்கு வருகைதரும் பொதுமக்களின் நலன்கருதி இலவச போக்குவரத்து சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago