Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சண்முகன் தவசீலன்
“முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு, எம்மால் நியமிக்கப்படவிருக்கும் 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், அமைச்சினால் மேற்கொள்ளப்படவிருக்கும் கள ஆய்வின் அடிப்படையிலும், எந்தவொரு உரிமையாளரும் பாதிக்கப்படாத வகையில், நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்” என, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களுடன், முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றக் கலந்துரையாலின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 89 பஸ் உரிமையாளர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பில், சேவை வழங்குநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, வழித்தடங்களில் அளவுக்கு அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், தக்கான செலவீனத்தைக்கூட பெறுவதில் சிரமத்தினை எதிர்நோக்குவதாகவும், வழித்தடத்தில் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர், மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு இன்னும் ஒரு வாரத்தில் அமைக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அவர்கள் ஒவ்வொரு உரிமையாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டு, அறிக்கை சமர்பிப்பார்கள்.
ஒவ்வொரு வழித்தடத்திலும் எத்தனை பஸ்கள் பயணிக்கமுடியும் மற்றும் சேவை வழங்குநர்கள் நட்டமடையாமல் இருப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் போன்ற விடயங்கள், அமைச்சின் ஊடாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அவை இரண்டின் அடிப்படையில், எந்தவொரு உரிமையாளரும் நட்டம் அடையாத வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்” என போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago