2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பு

George   / 2016 மே 02 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கட்பட்ட  ஒலுமடு வீதியில் சுமார் 1.6 கிலோமீற்றர் தூரம் திருத்தம் செய்வதற்கான பணிகளை, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க, வட மாகாண அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட இவ் அபிவிருத்தி பணி, 4 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 70 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளவுள்ள ஏனைய அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன், வட மாகாண போக்குவரத்து அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் செ.மயூரன், வட மாகாண போக்குவரத்து  மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலளார் க. சத்தியசீலன் உட்பட பலரும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X