2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீதிகளில் சிதறிக்கிடக்கும் மின்கட்டண சிட்டைகள்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால், பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின்கட்டண சிட்டைகள், வீதிகளில் எறியப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மின்சார சபையினால் விநியோகிக்கப்படும் மின்கட்டண சிட்டைகளே, கிளிநொச்சி - பரந்தன் - பூநகரி வீதியின் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு எறியப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின்,தர்மபுரம், முரசுமோட்டை, ஊரியான், புண்ணைநீராவி, மயில்வானகபுரம் போன்ற கிராமங்களுக்குரிய, கடந்த வருடம் நவம்பர் மாதத்துக்குரிய மின்கட்டண சிட்டைகளே இவ்வாறு வீதியில் எறிப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேச மக்களிடம், கடந்த வருடம் நவம்பர் மாதத்துக்குரிய மின்கட்டண சிட்டைகள் கிடைத்தனவா என்று வினவிய போது, இதுவரை தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றே, அவர்கள் கூறினர்.

இது  தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய மின்சாரசபை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது, இது விடயத்தில் என்ன நடந்தது? எவ்வாறு வீதிக்கு தங்களின் உத்தியோகபூர்வ சிட்டைகள் சென்றது? என்பது தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .