2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீதி திறந்து வைப்பு

Niroshini   / 2017 ஜனவரி 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்


கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியினை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார்.

வடக்குக்கான இரண்டு நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று வியாழக்கிழமை, கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளித்துள்ளதுடன், சில வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டுள்ளார்.

அந்தவகையில், கிளிநொச்சி - அக்கராயன் பகுதிக்கு இன்று வியாழக்கிழமை (19) விஜயம் செய்து ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதார் மஸ்தான், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் க.கமலேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் மற்றும் மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக நிலையான யுகத்தின் மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் மேற்படி  நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .