Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2017 ஜனவரி 19 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக பொது அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை மீள்குடியேற்ற அமைச்சு பெற்று வருகிறது.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்கள், ஒரு அங்கத்தவரைக் கொண்ட குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக மாவட்டத்தில் வசிக்காதவர்கள் என அனைத்து தரப்பினர்களிடமும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
“பொருத்து வீட்டுக்கு மக்கள் பெரும் தொகையில் விண்ணப்பத்துள்ளனர். எனவே, அது மக்களின் விருப்பத்திற்குரிய வீடு எனக் காட்டுவதற்கே மீள்குடியேற்ற அமைச்சு இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என மாவட்ட பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 11 ஆயிரம் பொருத்து வீட்டுக்கான விண்ணப்படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனை மாவட்டச் செயலகம், கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்கு 6,500 விண்ணப்பங்களும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு 2,300 விண்ணப்பங்களும், பூநகரி பிரதேச செயலகப்பிரிவுக்கு 1,500 விண்ணப்பங்களும், பளை பிரதேச செயலக பிரிவுக்கு 700 விண்ணப்பங்களை வழங்கியுள்ளது.
இதனை தவிர, மீள்குடியேற்ற அமைச்சு அரச திணைக்களங்களுக்கு அப்பாலும் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்களை வழங்கி விதிமுறைகள், நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாது பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த பொருத்து வீட்டுத் திட்டத்தை விட்டால், வேறு வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறாது. எனவே கொட்டில்களில் இருப்பதனை விட கிடைக்கின்ற எதனையாவது பெற்றுக்கொள்வோம் என்ற நிலையில், விருப்பமின்றி விண்ணப்பங்களை பூரணப்படுத்தி மக்கள் வழங்கி வருவதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago