2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வெளிச்ச வீடு அமைப்பதற்கு ஐந்து மில்லியன் ரூபாய் வேண்டும்

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதற்கு ஐந்து மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலக விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இந்த முல்லைத்தீவு வெளிச்ச வீடு 1990ஆம் ஆண்டு அழிவடைந்தது.

 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், முல்லைத்தீவில் வெளிச்ச வீட்டினை அமைத்து தருமாறும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வெளிச்சவீடு அவசியமானதெனவும் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களினால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதற்கு ஐந்து மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக இணைத்தலைமைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .