Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Sudharshini / 2016 ஜூன் 08 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வடகாடுப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால், பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர் செய்கை நிலங்கள் ஆகியவற்றுக்குள் தொடர்ச்சியாக காட்டுயானைகள் உட்புகுந்து, பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மாலை 6.00 மணியளவில் ஊர் மனைகளுக்குள் புகும் காட்டு யானைகள், நெற் பயிர்;களையும் மற்றும் மரவள்ளி, பூசணி போன்ற தோட்டப் பயிர்களையும் அழித்து வருகின்றன. அத்துடன், மா, பலா, தென்னை, போன்ற மரங்களையும் அழித்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை (07) இரவு ஊர்மனைக்குள் புகுந்த காட்டு யானைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான யானைகளின் தாக்கங்கள் இல்லை என்றும் அண்மைய நாட்களாகவே இவ்வாறு யானைகளின் பாதிப்பு அதிகரித்துள்ளன.
தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானைகளே இவ்வாறு இந்தக் காடுகளில் விடப்பட்டிருக்கலாம் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago