Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
“வட மாகாண பொதுமக்களில், 99 சதவீதமானோர் நல்லொழுக்கம் கொண்டவர்கள். ஒரு சிலரை வைத்து ஏனையோரை மதிப்பிட முடியாது” என வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு த. கணேசநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை பொலிஸ் திணைக்களத்தில், 1,000 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 18 தொடக்கம் 28 வயதுடைய ஆண், பெண் இருபாலாரும் பொலிஸ் சேவையில் இணைய முடியும். பொலிஸ் சேவைக்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால, கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் அதிகாரி என்ற அடிப்படையில் சேவைகளை வழங்கி வருகின்றோம். இதனால் சேவைகளை சிறப்பாக வழங்க இடர்கள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய ஏற்பாடுகள் உள்ளதா என த. கணேசநாதனிடம் வினவியபோது, அதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவ்வாறு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பில் அவர்களுக்குப் பொருத்தமான பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வாள்வெட்டு சம்பவத்துடன் கைதுசெய்யப்படும் இளைஞர்கள்களின் பின்னணியில் ஆயுதக் குழுக்கள் உள்ளனவா என வினவியபோது, ஆயுத குழுக்களின் பின்னணி ஏதும் இல்லை. குற்றமிழைப்பவர்கள், மது போதையாலும் தனிப்பட்ட பிரச்சினையாலுமே குற்றங்களை இழைக்கின்றனர். வடமாகாணத்தில் உள்ள மக்களில் 99 சதவீதமானோர் நல்லொழுக்கம் கொண்டவர்கள் எனவும், ஒரு சிலரது செயற்பாடுகளால் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
2 hours ago