2025 மே 19, திங்கட்கிழமை

வட்டுவாகல்,சாலை கடல்நீர் ஏரிகள் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மவாட்டத்தில் காணப்படும் நந்திக்கடல் நீர் ஏரியும் சாலை கடல் நீரேரியும் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன.

அண்மை நாள்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தால், அந்நீர் ஏரிகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன், வட்டுவாகல் பாலத்துக்கு மேல் ஒரு அடிவரை நீர் மூடிக் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட செயலாளரின் உத்தரவுக்கு அமைய, இன்று காலை நந்திக்கடல் நீர் ஏரி வெட்டப்பட்டு, பெருங்கடலுடன் சங்கமிக்க செய்யப்பட்டுள்ளது.

இதனால் நந்திக்கடல் வெளியினை அண்டிய பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படவுள்ளதுடன், மீனவர்களின் தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும் என மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆண்டுதோறும் இவ்வாறான சம்பிரதாயபூர்வமான நிகழ்வாக இதனை கருதுவதாகவும் நந்திக்கடல் களப்பினை நம்பி 5,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நந்திக்கடல் - வட்டுவாகல் பாலத்தை ஆழப்படுத்தி தருமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X