2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீணாக கடலுடன் கலக்கும் நீர்

Freelancer   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குளத்தை புனரமைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இக்குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1954ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்குளம், 21 அடி முழுமையான நீர் மட்டத்தைக் கொண்டது. 2,700 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் செய்யக் கூடியது. 2022ஆம் ஆண்டு காற்றுடன் கூடிய மழை காரணமாக குளத்தின் உட்பகுதி பெரும் சேதம் அடைந்தது.

இந்நிலையில், குளத்தின் அணைக்கட்டின் உட்பகுதியில் சேதங்கள் காணப்படுவதன் காரணமாக, கூடுதலான நீரை சேமித்து வைக்க முடியாத நிலைமை காணப்படுவதுடன் சில வேளையில் இக்குளம் உடைக்குமானால் குமுழமுனை கிழக்கு மக்கள் பாதிக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

தனிக்கல் ஆற்றின் மூலம் கூடுதலான நீர் இக்குளத்துக்குக் கிடைக்கின்றது.

இக்குளத்தின் வான் வெள்ளம் பாய்கின்ற போதோ, கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்ற போதோ, நீர் நாயாறு வழியாக கடலைச் சென்றடைகின்றது.

இக்குளத்தை புனரமைப்பதன் மூலம், காலபோகம், சிறுபோகம் என்பவற்றை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .