2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 07 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மழைக் காலங்களிலும் வெயில் காலங்களிலும் வானம் தெரியும் கூரையுடன் வசிக்கும் தமக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகளை வழங்கவேண்டும் எனவும் அரச அதிகாரிகள், தமது நிலையை உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

காலை 7 மணியில் இருந்து சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா வருகை தந்து, அம் மக்களை சந்தித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .