Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மக்கள் தமது வயல் காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
1984ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தாங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் எனினும் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் இதுவரை தமது வயல்காணிகள் விடுவிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தாம் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் அரச மற்றும் அரச சார்பற்ற நிறவனங்களின் உதவிகளை எதிர்பார்திருப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், தமது வயல் காணிகள் தமக்கு கிடைக்கும் பட்சத்தில் யாருடைய உதவிக்கும் கையேந்தும் நிலைமை இருக்காது எனவும் சுட்டிக்காட்டினர்.
மகாவலி அபிவிருத்தி வலயம் எனும் பெயரில் தமது காணிகளில் இருந்து தம்மை வெளியேற்றிவிட்டு சிங்கள மக்களுக்கு அரசாங்கம் காணி உரிமையை வழங்குவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இந்த மக்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதில் தமிழ் அரசியல்வாதிகள் கூட மொத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மக்களை புறக்கணிக்கும் நிலை காணப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் உறுப்பினர்கள் தம்மை வந்து சந்திப்பதாகவும் வெற்றி பெற்றதும் தமது பிரதேசங்களுக்கு அவர்கள் வருவதில்லை என்றும் மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
தமது வயல் காணிகளை விடுவிப்பதற்கு உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago