Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான பொங்கலை முன்னிட்டு, உற்சவ முன்னாயத்த ஆலோசனைக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆலய முன்றலில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள இப்பொங்கல் விழாவுக்கான ஏற்பாட்டு கூட்டத்தில், பண்டமெடுத்தல், சுகாதாரம், போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, குடிநீர், பாதுகாப்பு, சிரமதானம் மற்றும் கடை வாடகை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்படுவதோடு, மாற்றீடாக காகிதப் பைகள் மற்றும் பனையோலை பெட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், தீன்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் என்பவற்றின் சுகாதாரம் என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago