Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 12 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நிலவும் வரட்சி காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கையில் 33 ஆயிரம் ஏக்கர் வரையான பயிர்ச்செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களின் கீழ் 33,650 ஏக்கர் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைவிட சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் மானாவாரி வயல் நிலங்கள் உள்ளடங்களாக 25 ஆயிரத்து 800 ஏக்கர் வரையான நிலப்பரப்பும் என சுமார் 59 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு பருவமழை பொய்த்து போனமையால் நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் உள்ள கல்மடுக்குளம் அக்கராயன்குளம் புதுமுறிக்குளம் ஆகிய மூன்றுகுளங்களிலும் நீர்மட்டம் தவிர ஏனைய குளங்களில் 50 வீதமான நீரை மட்டும் சேமிக்கமுடிந்தது. இதிலும், வடக்கின் மிகப்பெரிய குளமான பயிர்ச்செய்கையில் பெரும் பங்கை வகிக்கின்ற இரணைமடுக்குளத்தில் 20 வீதமான தண்ணீரை மட்டும் சேமிக்க முடிந்துள்ளது.
இதனால், இரணைமடுக்குளத்தின் கீழான செய்கைகளுக்கு போதியளவு நீர் இன்றி நெற்பயிர்கள் அழிவடையும் அபாயநிலை காணப்படுகின்றது.
இதனைவிட சிறிய குளங்கள் மற்றும் மானாவாரி நிலங்களின் கீழ் உள்ள செய்கைகளும் அழிவடையும் அபாயநிலை காணப்படுகின்றது.
அதாவது தற்போது ஜனவரி மாதத்தில் மழை பெய்யாது போகுமானால் சுமார் முப்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர் செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டப்பிரதி நீர்ப்பாசனபொறியியலாளர் என்.சுதாகரன் கருத்துத்தெரிவிக்கும் போது, “எமது மாவட்டத்துக்கு எதிர்பார்த்த மழைவீழ்ச்சி கிடைக்காமை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர்ப்பாசனத்திணைக்களம் இவ்வாறான நிலை எதனையும் சந்தித்ததில்லை. அதாவது டிசெம்பர், ஜனவரி மாதங்களில் தண்ணீர் இல்லாத நிலை காணப்படுவதில்லை. நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள ஒன்பது குளங்களின் கீழ் சுமார் 33 ஆயிரம் ஏக்கருக்கு தண்ணீர் வழங்கக்கூடிய பயிர் செய்கைநிலங்கள் உள்ளன. கால போகத்தில் இந்நிலையில் மூன்று குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன. ஏனைய குளங்களில் 50 வீதமான தண்ணீரைத்தான் தேக்கமுடிந்தது.
இரணைமடுக்குளத்தின் கீழ் 20 வீதமான தண்ணீரை மாத்திரம் தேக்கமுடிந்தது. ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீரைத்தேக்கக்கூடியதாகவுள்ள போதும், 15 ஆயிரம் ஏக்கர் கன அடி தண்ணீரை மாத்திரம் சேமிக்க முடிந்தது.
கடந்த ஆண்டில் 1,300 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்த போதும் எமக்கு தேவையான காலத்தில் மழைபெய்யவில்லை. மே மாதம் 700 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதுடன், ஒக்டோபர் மாதம் காலபோக செய்கை மேற்கொள்ளவேண்டிய போது, மழை பெய்யவில்லை நவம்பர் 05,06ஆ ம்திகதி மாத்திரம் மழை பெய்திருந்தது. இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களில் நீரின் அளவு ஓரளவு போதுமான அளவுள்ளது.
தற்போது இரணைமடுக்குள விவசாயிகளுக்கு பயிரை பாதுகாக்கும் பொருட்டும் மானாவாரியில் நீர்பாயக்கூடிய பகுதிகளுக்கும்பயிரை பாதுகாக்கும் பொருட்டு ஏனைய குளங்களில் இருந்து தண்ணீரை வழங்கி வருகின்றோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago