Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
க. அகரன் / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் வழங்கப்படும் வரட்சி நிவாரணத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கும் வரட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவு மக்கள் இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பிரதேச செயலக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு வருகை தந்தபோது தமக்கு பதில் கூறி விட்டு செல்லுமாறு வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து அப்பகுதி கிராம அலுவலரை அழைத்த பிரதேச செயலாளர் மக்களுடன் இது தொடர்பாக உரையாடினார்.
இருப்பினும் அப்பேச்சுக்களில் திருப்தியடையாத மக்கள் பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்து மாவட்டச் செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பதில் வழங்குவதாக மாவட்டச் செயலர் ரோஹண புஸ்பகுமார, தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
2 hours ago