2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பம்

Niroshini   / 2021 மே 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு  -  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (10)   அதிகாலை,  பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமானது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோவில் நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்துகொண்டு, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி, இந்த உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


முள்ளியவளை காட்டா  விநாயகர் கோவிலில் இருந்து, இன்று  அதிகாலை 2 மணிக்கு, வழிபாடுகள் இடம்பெற்று, அதைத் தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த  குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக  அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.

17ஆம் திகதி திங்கட்கிழமை, தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 24ஆம் திகதி திங்கட்கிழமை, வற்றாப்பளை கண்ணகி  அம்மனின் பொங்கல் உற்சவமும் இடம்பெறும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வற்றாப்பளை கண்ணகி  அம்மன் கோவில் வருடாந்த உற்சவத்துக்கு, இம்முறை பக்தர்கள் கலந்துகொள்வது  தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .