Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 20 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம், இன்று (20) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பள்ளிவாசல் பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதிளவு சேதமடைந்துள்ளன.
குறித்த வர்த்தக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசமிகளின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டது.
இதேவேளை, தீ விபத்து குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடைபெறாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்களும், பள்ளிவாசல் நிர்வாகமும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பதற்றநிலை நிலவிய இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், அயூப் அஸ்மின், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் சென்று நிலமைகளை அவதானித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸார் விசேட குழுவை அமைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago