2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மன்னாரில் மக்கள் பேரணி

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, மக்கள் பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் மன்னாரில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றன.  

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் “வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களத்தின்” ஏற்பாட்டில் மன்னார் சமாதான அமைப்பின் அனுசரனையுடன் இந்தப் பேரணியும், விழிப்புணர்வும் இடம்பெற்றன.  

மன்னார் பிரதான பாலத்தின் நுழைவாயிலில், காலை 10 மணியளவில் மக்கள் பேரணி ஆரம்பமானது. இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். குறித்த ஊர்வலம், மன்னார் பஸார் பகுதியூடாக, மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.  

பின்னர், நகர சபை மண்டபத்தில், வறுமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X