2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வலயக் கல்விப் பணிமனைக்கு பஸ் வேண்டும்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு பஸ்ஸொன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலே 112 பாடசாலைகளில் 104 பாடசாலைகள் இயங்குகின்றன.

இப்பாடசாலைகளின் மாணவர்கள் போட்டி நிகழ்வுகளுக்கு நீண்ட தூரங்களில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கே வரவேண்டி உள்ள நிலையில் வலயக் கல்விப் பணிமனையிடம் பஸ்ஸொன்று இருப்பின் போட்டிகளுக்கு மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக இருக்கும்.

இது தொடர்பாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலே பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து நெருக்கடி காரணமாகப் போட்டிகளில் பங்குகொள்வதில் சிக்கல்களையுயும் சிலவேளைகளில் போட்டிகளில் பங்குகொள்ள முடியாத நிலைமை இருப்பதாகவும் கல்வி அதிகாரிகளினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .