2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வளலாய் கந்தனார் வீதி புனரமைப்பு

Princiya Dixci   / 2016 மே 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகளை மேற்படுத்தும் திட்;டத்தின் கீழ் 1.8 மீற்றர் வளலாய் கந்தனார் வீதி திருத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியின் கீழ் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஊடாக இவ் வீதி திருத்தப்பட்டு வருவதனைக் காணக்ககூடியதாக உள்ளது.

1.2 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இவ்வீதி, வளலாய் மேற்கினையும் வளலாய் வடக்கையும் இணைக்கும் வீதியாகக் காணப்படுகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டில் இப் பிரதேசம் இருந்த போது இவ் வீதி முற்றாக மறைக்கப்பட்டு பொதுமக்களின் தோட்டக்காணிகள் ஊடாக இராணுவத்தினர் தமது போக்குவரத்துத் தேவையினை மேற்கொண்டிருந்தனர்.

தற்போது இப்பகுதி விடுவிக்கப்பட்டதனை அடுத்து பொதுமக்கள் தமது தோட்டக்காணிகளைக் கையகப்படுத்தியிருந்தனர்.

இதனால் மூடி மறைக்கப்பட்டிருந்த வீதி பொதுமக்களின் உதவியுடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது கிரவல் மண் போடப்பட்டு தார் பாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .