Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
25 அடி நீர்க் கொள்ளளவுடைய வவுனிக்குளத்தில், தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக நீர், முழுமையாக வற்றியுள்ளது. இதன் காரணமாக சுமார் 3,000 ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவடையும் அபாயநிலை காணப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக, முல்லைத்தீவு மாந்தை - கிழக்கு வவுனிக்குளத்தில் நீர், முழுமையாக வற்றியுள்ளது.
இதனால் இக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள 6,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கையில் 3,000 ஏக்கர் வரையான செய்கை, அழிவடையும் அபாய நிலையை எட்டியுள்ளது.
மீதமாக உள்ள 3,000 ஏக்கர் நெற்செய்கைக்கு, கிணறுகளில் இருந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் நீர் இறைத்து, தமது பயிர்ச்செய்கைகளைப் பாதுகாத்து வருகின்றனர்.
இதேவேளை. ஏற்கெனவே, இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மானாவாரி நெற்செய்கைகள் மற்றும் சிறுதானியச் செய்கைகள் என்பன, முழுமையாக அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025