2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில்…

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரி, வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்பாகவே, இவ் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டவர்கள்,

“ஐ.நாவே இலங்கை அரசாங்கத்துக்குக் கால நீடிப்பை வழங்காதே”, “சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா”, “வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே“ மற்றும் “சர்வதேசமே நீதியை புதைக்காதே“ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரமுகர்கள் எனப் பலரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .