Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஆயுதக்குழுவொன்றின் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்தியவாகள் 100 கோடி கேட்டு மிரட்டியதாக வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்த இளம் கண்டு பிடிப்பாளர் ஜக்சன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“வவுனியா நகரில் உள்ள பஸ் நிலையத்தில் வைத்து தம்மை வவுனியாவில் முன்பு பிரபலமாக காணப்பட்ட ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தியவர்கள் உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர்.
அதன் நிமிர்த்தம் அவர்களது அரசியல் செயற்பாட்டுக்காக கேட்கின்றனர் என எண்ணி எவ்வளவு பணம் தேவை என கேட்டேன். அவர்கள் உடனடியாக 100 கோடி வேண்டும் என்றனர். என்னால் அவ்வளவு பணம் தரமுடியாது என தெரிவித்தபோது அவர்கள் தரக்குறைவாக பேசினர்.
மீண்டும் போராட்டத்துக்காக பணம் வேண்டும் என்றனர். எனினும் என்னால் முடியாது. அதற்கு நான் தரமுடியாது என்றேன். மீண்டும் என்னையும் எனது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசினர்” என தெரிவித்தார்.
இது தொடர்பாக நீங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையா என கேட்டபோது,
“என்னிடம் பணம் கேட்டதற்கான ஆதாரத்தை கேட்பார்கள். என்னிடம் ஆதாரம் இல்லாமையினால் நான் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. எனினும் நான் நாளை ஓமந்தை பொலிஸில் முறைப்பாடு செய்வேன்” என தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்சன் தெரிவித்த முன்னாள் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் என தெரிவித்த தற்போதைய அரசியல் கட்சியின் பிரமுகரொருவரிடம் இத தொடர்பில் கேட்டபோது,
“சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபர்கள் எமது கட்சியில் இல்லை. அவர்களை நாம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago