2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

Niroshini   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில், சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம்,இன்று (06), மாவட்டச் செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுர் உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன், விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிகழ்வினை, வவுனியா மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளரின் அழைப்பில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .