Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 12 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு, வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
"வவுனியாவில் கடந்த சில தினங்களில், 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவர், அண்மையில் உயிரிழந்திருந்தார்.
"இந்த நிலையில், தொற்று ஏற்பட வாய்புகள் அதிகம் உள்ளதால், சிறுவர்களையும் குழந்தைகளையும், தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.
"குறிப்பாக கர்ப்பிணித் தாய்மாரும் சிறுவர்களும், அவதானமாக இருக்க வேண்டும்” என்றார்.
தற்போது, 22 பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு, 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும், 5 பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஒருவர், அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும், சுவாசத்தைப் பாதிக்காதவாறு முகக்கவசம் அணிந்து, பாதுகாப்புடன் செயற்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago