2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனிக்குளத்தின் கீழ் 6,060 ஏக்கரில் நெற்செய்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 நவம்பர் 29 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ், இவ்வாண்டு 6,060 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலையில் குளத்தின் நீரைத் தேக்கமுடியாத நிலை மற்றும் கடந்தகால யுத்தம் காரணமாக பல ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டமை காரணமாக, கடந்த காலங்களில், குறித்த பகுதியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டில், குறித்த குளம் புனரமைக்கப்பட்டதுடன், தொடர்ந்து வந்த ஆண்டுகளில், ஏனைய அபிவிருத்தி வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது இக்குளத்தில், 26 அடி நீரைத் தேக்கக்கூடியதுடன், 6,060 ஏக்கருக்குரிய நீர்ப்பாசனத்தைமேற்கொள்ள முடியும் தெரிவித்துள்ள வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களம், ஏற்கெனவே காலபோகப் பயிர்செய்கைக் கூட்டத்துக்கு அமைவாக, விவசாயிகள் பயிர்செய்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .