Freelancer / 2022 மார்ச் 08 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று குறித்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தனர்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகமானது (சிங்கள பிரதேச செயலகம்) வவுனியா, மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள ரயில் கடவை அருகில் அமைந்துள்ளது.
குறித்த பகுதியானது தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியாக உள்ளதுடன், குறித்த பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட அதிகளவிலான உத்தியோகத்தர்கள் தமிழ், முஸ்லிம் மக்களாகவே உள்ள நிலையில் குறித்த பிரதேச செயலக வளாகத்தில் பிரமாண்டமாக பீடம் ஒன்று அமைக்கப்பட்டு புத்தருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது.
வடக்கில் இடம்பெற்று வரும் அரசின் பௌத்தமயமாக்கல் திட்டங்களுக்குப் பிரதேச செயலங்களும் உடந்தையாக செயற்படுகின்றனவா எனப் புத்துஜீவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். (K)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago