2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனியா பஸ் நிலைய கடைத் தொகுதிக்குள் வெள்ளம்

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, பஸ் நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியாவில், இன்று பிற்பகல் பெய்த மழை காரணமாகவே மழை நீர் உட்புகுந்ததால் வர்த்தகர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


வவுனியா பிரதான பஸ் நிலையத்தில், நகரசபைக்கு சொந்தமான மாடிக் கட்டடத் தொகுதியொன்று காணப்படுகின்றது. இக்கட்டடத்தின் கூரைப் பகுதிகள் உடைவுற்றும் சேதமடைந்துமுள்ளமையால் அவற்றினூடாக வரும் மழை நீரானது வர்த்தக நிலையங்களுக்குள் நேரடியாக செல்கின்றது. இதன் காரணமாக வியாபராம் செய்ய முடியாத நிலையில் வர்த்தகர்கள் உள்ளதுடன் தமது பொருட்களை பாதுகாக்க வேறு இடத்தை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மாடி கடைத் தொகுதியில் மழை பெய்கின்ற போது மழை நீர் வெள்ளமாக காட்சியளிக்கின்றது.

இதனால் புடவைக் கடவை, டெயிலர் கடை என ஏழு கடைகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. மாதாந்தம் 3, 200 ரூபாய் வீதம் வவுனியா நகர சபையால் மாதாந்த வாடகை அறவிடப்படுவதுடன், அப்பணம் உரிய காலப் பகுதியில் செலுத்தாது காலம் தாழ்த்திச் செலுத்தினால் தண்டப்பணமும் அறவிடப்படுகின்றது. ஆனால் அக்கடைகளோ மழை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .