Niroshini / 2021 மே 04 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - குஞ்சுக்குளம், வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை, விசேடஅதிரடி படையினர் நேற்றயதினம் மீட்டனர்.
குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதி மற்றும் வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள், இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், 7 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நீதிமன்ற அனுமதியின் பின்னர் வெடிபொருள்களை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .