Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில் ஏ9 வீதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையை, இன்று காலை தொடக்கம் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா - புளியங்குளம், ஓமந்தை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகத்துக்கிடமாகச்செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டன.
மோப்ப நாயின் மூலமும் சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு பலப்படுத்துமாறு கூறியதையடுத்து, பொதிகளுடன் வருபவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான பஸ்களை சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே இன்று புளியங்குளம், ஓமந்தை அண்மித்து பகுதியில் காலை 7.30 மணியில் இருந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
35 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
46 minute ago