Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க அகரன்
வவுனியா - புளியங்குளம் பகுதியில், நேற்று முன்தினம் (27) இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓமந்தை, புளியங்குளம், அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக, மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (27), புளியங்குளம் - புதூர் பகுதியில் உள்ள இராணுவச் சோதனை சாவடியில் வைத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை வழி மறித்து சோதனை செய்த போது, பணயப் பொதியில், 5 கிலோகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago