Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 ஜூன் 25 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா நைனாமடுவில் நேற்று 24.6 மாலை 5.30மணியளவில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதானகே தலைமையிலான பொலிஸார் நெடுங்கேணி நைனாமடு வீதியில் புளியங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க முதிரை குற்றிகள் 7 கப் ரக வாகனத்தில் எடுத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்த போது வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாக செலுத்தியுள்ளார்.
வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் சன்னாசிபரந்தன் பகுதியில் வழிமறித்த போது இருவர் தப்பித்து சென்றதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவரையும் முதிரைக் குற்றிகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தினர் சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
18 minute ago
27 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
45 minute ago