2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனியாவில் முதியோர் கௌரவிப்பு

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

முதியோரைப் பேணுதல் எனும் தொனிப்பொருளில், வவுனியா சமூக சேவை திணைக்களம், மாவட்ட முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டுடன், வவுனியாவில் இன்று விழிப்புணர்வு ஊர்வலமொன்றை நடத்தியது.

வவுனியா மாவட்ட சமூக சேவைத் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் ரோஹண புஸ்பகுமார பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக, பஸ்களில் முதியோருக்கான ஆசன ஒதக்கீடு தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், ரயில் வீதியூடாக வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை வந்தடைந்தது.

இதன்போது வவுனியா நகர கலாச்சார மண்டபத்தில், முதியோருக்கான கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .