Niroshini / 2021 ஜூலை 25 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசத்தில், வாகன நெருக்கடியால் கழிவகற்றலில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுவதாக, கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார்.
இது தொட்ர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது கழிவகற்றலில் ஆறு உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் இந்த உழவு இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் கழிவகற்றல் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் கூறினார்.
இவற்றில், ஓர் உழவு இயந்திரம் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றதெனத் தெரிவித்த அவர், இன்னோர் உழவு இயந்திரம் பாதுகாப்பான கழிவகற்றலுக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.
'மாவட்டங்களில் காணப்படுகின்றது போல் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் பெரிய கழிவகற்றல் வாகனம் இல்லை. இதனை மத்திய அரசாங்கம் வழங்கலாம். எம்மிடம் உள்ள வாகன வளங்களை வைத்துக் கொண்டுதான் சிறப்பாக கழிவகற்றலை எமது பிரதேச சபை எல்லைப் பகுதியில் மேற்கொண்டு வருகிறோம்' என்று, தவிசாளர் தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago