2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனை

Editorial   / 2017 நவம்பர் 22 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்கும் வகையில், நேற்று (21) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சகல வாகனங்களையும், முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸார், பனிக்கன்குளம் பகுதியில் வழிமறித்து, தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தினர். 

மாங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

வவுனியா, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்பு நோக்கி ஏ-9 வீதியூடாகப் பயணித்த பஸ்கள் உள்ளிட்ட சகல வாகனங்களும், நேற்று (21) இரவு 8 மணி முதல், மாங்குளம் - பனிக்கன்குளம் பகுதியில் வழிமறிக்கப்பட்டு, சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட பயணப்பொதிகளையும் வாகனங்களையும், சிற்றூர்திகளையும், தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .