2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘விவசாயத்துறையில் பிரச்சினைகள் அதிகம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்   

 

வடக்கு கிழக்கு மாகாணங்களில், விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.  இதனால்தான் அரசாங்கம் தனக்கு இப் பதவியை தந்துள்ளதென, பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற  மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு காலத்தில் விவசாய உற்பத்தியில் முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று ஆக கடைசி நிலையில் உள்ளது. வடக்கின் விவசாய உற்பத்திகள் அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளன.  ஆனால் வடக்கில் 40 வீதமானவர்கள் விவசாயிகளாக காணப்படுகின்றனர்.

வடக்கு - கிழக்கின் விவசாயத் துறையினை மேம்படுத்த அரசாங்கத்திடம் விசேட மீள் எழுச்சி நிதியினை கோரியிருக்கிறேன். அரசாங்கமும் அதனை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளது.

எனது பதவியின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X