Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வைத்தியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுருத்தல் போன்ற சம்பவங்களின் காரணமாகவே, தென் பகுதியில் இருந்தும் ஏனைய மாகாணங்களில் இருந்தும் வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலைக்குக் கடமையாற்ற வருவதற்குத் தயக்கம் காட்டுவதாக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரி மீதும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் மீதும், இன்று (06) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, நிலைமைகளை ஆராய்வதற்கென நேற்றுக் காலை வைத்தியசாலைக்குச் சென்ற வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், வைத்தியர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், குழந்தையின் இறப்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (06) காலை குறித்தப் பெண்ணைப் பார்க்க வந்த அவருடைய கணவரும் உறவினர் ஒருவரும் பிரசவ விடுதியில் உள்ள வைத்திய அதிகாரியையும் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டமெனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலைமையால், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு வைத்தியசாலைக்குப் பாதுகாப்பு அதிகரிப்பது என்பது, ஒரு வைத்தியசாலையின் பெயருக்குப் கலங்கத்தை ஏற்படுத்தக்கூடியதென, அவர் மேலும் கூறினார்.
16 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
40 minute ago