Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசான், எஸ். நிதர்ஷன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (24) காலை 10.30 மணியளவில் வெள்ளைக்கொடி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அரசாங்கத்துக்கு எதிராகப் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து, கைதிகளை விடுவிக்க வலியுறுத்தித் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இப்போராட்டத்தில், வெள்ளைக்கொடியுடன் அரசியல் கைதியாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலைப் பெற்ற கோமகன் கலந்துகொண்டார்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த கோமகன்,
“யாழ்ப்பாணத்துக்குக் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி வருகை தந்தபோது, கறுப்புக்கொடி ஏந்திப் போராடி இருந்தோம். அது தொடர்பில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் உரையாற்றும்போது, ‘எனக்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்தாதீர்கள், வெள்ளைக்கொடியை உயர்த்துங்கள். கறுப்புக்கொடியை உயர்த்தி என்னைப் பலவீனப்படுத்தினால், பேய்கள் பலம் பெற்று விடும்’ என உரையாற்றி இருந்தார்.
“அதனால் அவர் கோரியது போல இன்று நாம் வெள்ளைக்கொடி ஏந்திப் போராடுகின்றோம். அதேபோல ஜனாதிபதியும் எமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
15 minute ago
24 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
34 minute ago
2 hours ago