2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (22.04.2012 - 28.04.2012)

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தவார பலன்கள் (22.04.2012  -  28.04.2012)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

செய்யும் வேலைகளை திறமையாகச் செய்யும் மேட ராசி அன்பாகளே...!

இந்த வாரம் நீங்கள் எந்தவொரு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. போக்குவரத்துக்களில் கவனம்  தேவை. தொழில் சம்மந்தமாக பிரயாணங்கள் இலாபத்தைக் கொடுக்கும். பல  புதிய  காரியங்களுக்கு உண்டான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். செய்யும் தொழிலில் மேலும் சில புதிய உக்திகளைச் செலுத்துவீர்கள். புதிய பணி வாய்ப்புக்கள் தேடி வரும்.  வரவுக்கேற்ற செலவுகள் காணப்படும். தொழிலில் சிற்சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.  சில சந்திப்புக்கள் மனநிறைவைக் கூடுதலாக்கும். வெளி வட்டார பழக்கங்களால் செலவுகளே அதிகம் காணப்படும். இவ்வாறாக இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




கிருத்திகை 2,  3,  4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தரும சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தொடக்கத்தில் உடல் நிலையில் சிறிது பாதிப்புக்கள் உண்டாகும் . பணிகளை ஆர்வமின்றியே செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தைகள் தடைபடும்.  செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வார இறுதியில்  ஆன்மீக காரியங்கள் செய்வதற்கு மனதில் ஆர்வம் காணப்படும். புதிய முதலீடுகளுக்கான யோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். பொது காரியங்களில் தலையீடுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. இந்த வாரம் இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.
அதிர்ஷ்ட திகதி : 28
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)





மிருகசீரிஷம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1,  2,  3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடுமையான உழைப்பும் களைப்பில்லாத  மனமும் பெற்ற மிதுன ராசி அன்பர்களே...!           

இந்த வாரம்  உங்களுக்கு  நீண்ட நாளைய நண்பர்களின்  சந்திப்புகள் உண்டாகும்.  சில  தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.  பணத்தட்டுப்பாடுகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.  புதிய தொழில் அமைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.  பண விஷயத்தில் கவனம் தேவை. அயல்தேசங்களிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வார இறுதியில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை இருந்த போதும் பாதிப்பு இருக்காது. சில முக்கிய காரணங்களுக்காக சேமிப்புக்கள் குறையலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் காணப்படும். மனதில் சில காரணமற்ற செயல்களுக்காக பயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திகதி: 22
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் ( சந்திரன் )





புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

உற்சாகத்துடன் செயல்களில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் சில முக்கியமான பணிகளுக்காக உங்களுடைய சேமிப்புக்கள் குறையும்.  வெளியூர் பிரயாணங்களினால் சில புதிய பணி வாய்ப்புக்கள் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. உணவு விஷயத்தில் சிறிது வெறுப்புகள்  காணப்படும். கை கால் இவற்றில் வலிகள் ஏற்பட்டு நீங்கும்.  பயணங்கள் அலைச்சல் உடையதாய் இருக்கும். ஆனால் வார இறுதியில்  மனதில்  உற்சாகம் காணப்படும். நீண்ட  நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வியாபார சம்மந்தமாக பயணங்கள் சோர்வுடையதாய் இருக்கும். தேவையற்ற கோபம் மற்றும் அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் எண்ணம் ஈடேறும். பொறுப்புக்கள் அதிகமாக காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமான பேச்சுக்கள் சண்டையில் முடிந்து விடும். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. சில அவசியமான தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். அயலாருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும்.  வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகள் சிறு  அலைச்சல்களைக் கொடுக்கும்.  வார இறுதியில் அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய  வருகை நல்ல மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறும். செய்யும் செயல்கள் வெற்றியைத் தழுவும் . சில சந்திப்புக்கள் மன நிறைவைக் கூடுதலாக்கும். சிற் சில அசவுகர்யங்களைத் தவிர்க்க முடியாது.
அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




உத்திரம் 2,  3,  4 அஸ்தம் சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றத்திற்கு சொந்தக்காரரான  கன்னி ராசி அன்பர்களே...!


இந்த வாரம் இல்லத்தில் சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். மேலதிகாரிகளிடையே சுமூகமான நிலை காணப்படும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வார இறுதியில் தொழிலில் புதிய முதலீடுகளைத்  தவிர்ப்பது நல்லது. சிலவிதமான சிக்கல்கள் தோன்றும். தங்களது  உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். வீண் சிரமங்கள் தோன்றும். குடும்ப விவகாரங்களில் சற்று கூடுதல் நிதானம் தேவை. பொது காரியங்களில் தலையீடுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். இடமாற்றத்தின் மூலம் மனதில் சில சங்கடங்கள் உண்டாகும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. தேவையில்லாத பயங்கள் மனதில் தோன்றும்.
 அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



துலாம்சித்திரை 3, 4, சுவாதி,  விசாகம்1, 2, 3-ஆம் பாதங்கள்.

உயர்ந்த எண்ணங்கள் கொண்ட துலா ராசி அன்பர்களே...!    

இந்த வாரம் தொடக்கத்தில் இல்லத்தில் சகோதர சகோதரிகளின் வருகை காணப்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நல்ல இனிமையான உறக்கம் ஆகியவை  கிடைக்கும்.பணியில் பதவி உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். பொழுது போக்கு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்ச்சிகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் . நண்பர்களுடன் சுற்றுலா வாய்ப்புக்கள் தேடி வரும். விருந்துகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி  உண்டாகும். இவ்வாறாக இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே அமையும்.
அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்


சந்திராஷ்டமம்
ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி காலை 10.10மணியிலிருந்து ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி மாலை 01.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர்வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஜோதிடடத்தில் அதிக ஈடுபாடு காட்டும் விருட்ச்சிக ராசி அன்பர்களே...!    
                             

இந்த வாரம் தொடக்கத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நிலையில் சிறிது பாதிப்புக்கள் காணப்படும். பணியாளர்களுடன் சிறிது சங்கடமான சூழ்நிலைகள் உருவாகலாம். தொழிலில் அவ்வளவாக இலாபம் இருக்காது.  வியாபாரத்தில் திடீர் நஷ்டங்கள் உண்டாகும். வேண்டாத பேச்சுகளால்; மனக்கஷ்டங்களை அடைய நேரிடும். ஆனால் வார இறுதியில் தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.  கையில் இருக்கும் பணத்திற்கு தகுந்த செலவுகளை மேற்கொள்வது நல்லது. வெளிவட்டார பழக்கங்களால் வீண் அலைச்சல் மற்றும் செலவுகள் ஏற்படும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். பணியாளர்களிடையே சுமூகமான போக்குகள் காணப்படும். இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்
ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி காலை 11.00 மணியிலிருந்து ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி காலை 10.10 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர்வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

உயர்ந்த சிந்தனையும் எழுத்தாற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே

இந்த வாரம் தொடக்கத்தில் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் கட்டுப்பாடுகள் தேவை. சில முக்கியமான முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. அரசினரால் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய வியாபார முயற்ச்சிகள் கைகூடி வரும்.  தொழிலில்  தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும் . இருந்த போதிலும் காரணமற்ற வெறுப்பும் சோர்வும் காணப்படும். எதிர்கால சிந்தனைகள் சற்று அதிகமாகவே காணப்டும்.  எதிர்பார்த்த உதவிகள் சற்று கால தாமதத்தை உண்டாக்கும்.உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.  பண விஷயத்தில் சிக்கனம் அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகலாம். எனவே கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் ( சூரியன் )





உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம்1, 2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தர்மம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்;ட மகர ராசி அன்பர்களே ...!                    

இந்த வாரம் புதிய நண்பர்களின் மூலம் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய பணி நியமனத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். எந்த ஒரு விஷயத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பது  நன்மையை உண்டாக்கும்.இல்லத்தில் உடன் பிறந்தவர்களின் வருகையினால் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் தனலாபங்கள் கிடைக்கும்.தனிமை மற்றும் அமைதியான சூழலை விரும்புவீர்கள். செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். தொழிலில் லாபம் உண்;டாகும் மனம் மகிழ்ச்சியடையும். ஆனால் வார இறுதியில் பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்.  மற்றவர்களினால் பிரச்சனைகள் காணப்படும்.  எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு            
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)





அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கலைகளில் அதிக ஈடுபாடு காட்டும்; கும்ப ராசி அன்பர்களே...! 


இந்த வாரம் உடன் பிறந்த சகோதரிகளின் மூலம்  மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரலாம். இடமாற்றங்கள் நல்ல மனமாற்றத்தைக் கொடுக்கும். விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் நம் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும்.  இதனால் லாபமும் மகிழ்ச்சியும் கிட்டும். பெண்களினால் உதவி மற்றும் இன்பம் கிடைக்கும் . சில சந்திப்புக்கள் மனநிறைவைக்கொடுக்கும். புதிய அறிமுகங்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வுரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். ஆலயங்களில் சொற்பொழிவுகளைக் கேற்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இவ்வாறாக இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்





பூரட்டாதி 4, உத்திரட்டாதி,  ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

எல்லோரிடமும் நேர்மையுடன் பழகும் மீன ராசி அன்பர்களே...!  


இந்த வாரம்  முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் பண லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஆனாலும் மனதில் சில விதமான பயங்கள் தோன்றி மறையும். பணியாளர்களி;டத்தில் சிலவிதமான கருத்து வேறுபாடுகள் காணப்படும். பணிச்சுமைகள் அதிகம் காணப்படும். வார இறுதியில் தெய்வீக பணிகளுக்கான செயல்களை எதிர்பார்க்கலாம். பண வரவுகள் தாமதப்பட்ட போதும் கிடைக்கப்பெறுவீர்கள். பெற்றோரின் உதவிகள் மிகுந்த பயனைத்தரும். இடம் மாற்றம்  நல்லதொரு மனமாற்றத்தைக் கொடுக்கும்.  பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். இல்லத்தில் சுப செலவுகள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .