Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தவார பலன்கள் (24.07.2011 - 30.07.2011)
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
தனது தனித் திறனால் பல சாதனைகளை படைக்கும் ஆற்றல் கொண்ட மேட ராசி அன்பர்களே ,..!
இந்த வார ஆரம்பத்தில் நீங்கள் முயற்சி செய்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் சிறு பணத் தட்டுபாடுகள் ஏற்படக்கூடும். இதனால் நல்ல வாய்ப்புக்கள் பின்தள்ளபடும். நீண்ட நாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்புக்கள் மகிழ்ச்சி தரும். அரசாங்க ஊழியர்களின் நட்புறவுகள் நன்மையைத் தரும். அயல்தேச பயணங்கள் சென்று வர வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்வார்கள். மேலும் உற்றார் உறவினர்களின் மூலம் அழகிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். வார இறுதியில் நமது வாழ்க்கையில் முன்மாதிரியாக விளங்கும் பெரியோர்களின் வார்த்தைகளைக் கேட்டு செயற்படவும்.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
கிருத்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1 – 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
உதவி செய்தவர்களை என்றும் மறவாது உருக்கமான உள்ளத்தோடு பழகும் இடப ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் இறை நம்பிக்கையுடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் நன்மைகள் உண்டாகும். பெண்களுடன் தேவையற்ற பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதால் அது மனக்கசப்பை ஏற்படுத்தும். சிலர் தமது திறமையினால் புதிய சாதனைகளை மேம்படுத்துவார்கள். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவினால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். தொழிலில் நவீன வேலை முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் நன்கு சிந்தித்து செயற்படவும்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
மிருகசீரிடம் 2,3, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
எந்நேரமும் சோர்வின்றி சுறுப்பாகச் செயற்படும் நுணுக்கமான பார்வை உள்ள மிதுன ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் குடும்பத்தில் சுபகாரியங்களின் போது சொந்தபந்தங்களின் அன்பு அக்கரை அதிகரிக்கும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். வியாபார உத்தியோகஸ்தர்கள் தொழில் விருத்திக்காக பல புதிய நுட்பங்களை கையாளுதல். பிறரின் மூலம் தகவல் வந்து சேரும். ஆன்மீக தியானங்கள் யாத்திரைகளை மேற்கொள்ளும் போது மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும். பணப்பிரச்சினைகள் அலைச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆகவே பணம் சேமிப்பதில் கடின உழைப்பு அவசியம். வார இறுதியில் இதுவரை ஏற்பட்ட கவலைகள் மறைந்து வாழ்க்கையில் புதிய பாதைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
வாழ்க்கையில் அதிக எளிமையும் துணிவும் பெற்ற சிந்தனை ஆற்றல் அதிகம் கொண்ட கடக ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் மனதுக்கு உற்சாகம் தரும் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். நீண்ட நாள் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் நவீன சாதனங்களை பயன்படுத்தி ஆதாயம் அடையலாம். பொழுது போக்குகளுக்காக சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். அதிக அலைச்சல்களினால் உடல் சோர்வுகள் ஏற்படும். நலனில் அதிக கவனம் தேவை. வார இறுதியில் நமது வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சினைகள் கண்டு தளர்வடையாது மன உறுதியுடன் செயற்படவும்.
அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
தனது கவலைகளை யாரிடமும் மனம்விட்டு பேசாது சிரித்த முகத்தோடு காணப்படும் சிம்ம ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் புதிய வேலைத் திட்டங்களில் சிறு மந்த நிலையை ஏற்படுத்தக் கூடும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். இறைவழிபாடுகள் பிராத்தனைகளில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். இதனால் மன அமைதி கிடைக்கும். வெண்மையான ஆடைகளை அணியலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒருவொருக்கொருவர் விட்டுகொடுத்து செயற்படுவார்கள். சுவையான உணவுகள் நிறைவாக கிடைக்கும். சிலர் தூர பயணங்களின் போது நெருங்கிய நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு கிட்டும். வார இறுதியில் நமக்கு நன்மை நினைப்பவர்களை மதித்து நடப்பது சிறந்த குணமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவக்கிரம்)
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
கவலைகளை மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும் கன்னி ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் நீங்கள் திட்டமிட்டு செயற்படும் காரியங்களினால் நற்பலனை அடைவீர்கள். தீய நண்பர்களுடன் இணைந்து தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மேல் அதிகாரிகளினால் வியாபார உத்தியோகஸ்தர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சிந்தித்து செயற்படவும். குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அழகிய ஆடை அணிகளன்கள் பரிசாகக் கிடைக்கும். விசித்திரமான பொருள் காணக் கிடைத்தல். வார இறுதியில் பிறரின் பிரச்சினைகளை பொருட்படுத்தாது தமது கடமைகளை சரிவரச் செய்வதனால் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
சந்திராஷ்டமம்
ஜூலை 22ஆம் திகதி மாலை 10.09 மணியிலிருந்து ஜுலை 25ஆம் திகதி காலை 10.08 மணிவரை வரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
யாருடை துணையுமின்றி தன் முயற்சியினால் மட்டும் செயற்படும் துணிவான உள்ளம் கொண்ட துலா ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்குவதுடன் அன்றைய பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பகைவர்களின் பேச்சைக் கேட்டு அனாவசிய பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாது சுயசிந்தனையுடன் செயற்படவும். குடும்பத்தில் சுபகாரியங்களின் போது பெண்களின் உதவிகள் கிடைக்கும். நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும். வாகன சாரதிகளுக்கு தூரப் பிரயாணங்களினால் அதிக இலாபத்தை பெற்றுகொள்ளலாம். விநோத விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும். வார இறுதியில் உடல் நலனில் மிக கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
சந்திராஷ்டமம்
ஜுலை 25ஆம் திகதி காலை 10.08 மணியிலிருந்து ஜுலை 27ஆம் திகதி 7.28 மாலை மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
நல் விதையுள்ள மரமாக வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து வேகமாக வளர்ச்சியடையும் விருட்சிக ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் நன்மை பயக்கும் காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். சில புதிய இடமாற்றங்கள் இலாபகரமாக அமையக்கூடும். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுற்றத்தார் நண்பர்களின் வருகை உற்சாகத்தைத் தரும். வியாபாரத்தில் நவீன நுட்;பங்களினால் அதிக இலாபம் அடையலாம். மனதில் சிறு பயங்கள், குழப்பங்கள் வந்து நீங்கும். எதிர்பாராத புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக் கூடும். பொழுது போக்குகளில் ஈடுபடும் போது மிகக் கவனம் தேவை. வார இறுதியில் நீண்ட நாள் பிரிந்து சென்ற நட்புக்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகத்தைத் தரும்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
சந்திராஷ்டமம்
ஜுலை 27ஆம் திகதி மாலை 7.28 மணியிலிருந்து ஜுலை 29ஆம் திகதி காலை 01.13 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் முன்னிட்டு வாதிடுவதையும் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வணங்கி வர வேண்டும்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
தற்பெருமையின்றி ஏற்றம் தாழ்வு பாரது எல்லோருடரிடமும் எளிமையாக பழகும் தனுசு ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த முன்னேற்றமும் இலாபமும் காணப்படும். குடும்பத்தாருடன் ஆலய அனுஷ்டானங்கள் சென்று வருவதனால் நன்மைகள் உண்டாகும். வரவுகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கக்கூடும். இதனால் பணப்பிரச்சினைகள் ஏற்படும். துஷ்ட நண்பர்களினால் சில விதமான சிக்கல்கள் ஏற்படும். சிலர் தமது ஆற்றலினால் புதிய சாதனைகளை மேம்படுத்தல். உயர் அதிகாரிகளுடன் சுமூகமான முறையில் செயற்படவும். பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிக முயற்ச்சிகளை மேற்கொள்ளவும்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்
மற்றவர்களின் மனதை புரிந்து நடந்து கொள்ளும் மென்மையான சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே,
இந்த வாரம் ஆரம்பத்தில் தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும். சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை ஏற்படும். உடல் சோர்வுகள் வந்து நீங்கும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். தூய்மையான ஆடைகளை அணியலாம். மனதளவில் அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடும். சிலர் புதிய முயற்;சிகளில் ஈடுபடும் போது சிறு தடுமாற்றங்கள் ஏற்படும். பொறுமையுடன் நடக்கவும். அரசாங்க வேலை வாய்ப்புக்களுக்கு வழியுண்டு. பணவிடயங்கள் எதிர்பார்த்தபடி அமையாது. வார இறுதியில் இறை பிராத்தனைகள் வழிபாடுகளின் பலனாக சாதுக்களை தரிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
அறிவு கூர்மையுடன் செயல்களை செய்து வெற்றிபெறும் கும்ப ராசி அன்பர்களே,..!
இந்த வார ஆரம்பத்தில் நீண்ட தூர பயணங்கள் சற்று அலைச்சலை தரக்கூடும். பல புதிய சாதனைகளை நடைமுறைபடுத்துவதால் வெற்றி. நண்பர்களுடன் ஒன்றிணைந்து நவீன தொழில் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. இசைத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம். பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். கவனம் தேவை குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஒற்றுமை பலப்படும். வார இறுதியில் வாழ்க்கையில் கடின உழைப்பினால் செயற்படுவதனால் முன்னேற்றம் அடையலாம்.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9- பாதங்கள்.
கருத்தாழம் மிக்க எழுத்துத் திறமையும் கலையுணர்வு அதிகம் கொண்ட மீன ராசி அன்பர்களே,
இந்த வாரம் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு செயற்படவும். பெண்களுடன் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மனகசப்பை ஏற்படுத்தும். நாவடக்கம் அவசியம். ஒவ்வாத உணவினால் அஜீரண சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துவதால் அதிக பணவரவு ஏற்படும். வார இறுதியில் தெய்வீக வழிபாடுகள் தியானங்கள் அதிக ஈடுபாடு செலுத்தவும்.
அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago