2024 மே 25, சனிக்கிழமை

புரூஸ்லீயின் வீட்டை 23 மில்லியன் அமெ. டொலர்களுக்கு விற்க தீர்மானம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 25 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தற்காப்புக் கலையான குங்பூ வீரர் புரூஸ்லீயின் ஹொங்கொங் வீட்டை அருங்காட்சியகமாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து 23 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் தீர்மானித்துள்ளார்.

ஹொங்கொங்கை சேர்ந்தவர் புரூஸ்லீ. தற்காப்புக் கலையான குங்பூ கலையில் வீரர். குங்பூவை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

உலகெங்கும் புரூஸ்லீக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மிகவும் இளம் வயதில் அதாவது 32 வயதிலேயே அவர் மரணத்தைத் தழுவினார். இருப்பினும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

புருஸ்லீயின் வீடு ஹொங்கொங்கில் உள்ளது. இது 5000 சதுர அடி கொண்டது. 2 மாடிகளைக் கொண்ட கட்டடம் இது. ஹொங்கொங்கின் கோவ்லான் டாங் பகுதியில் இது உள்ளது.

அவர் கடைசியாக வசித்த அந்த வீட்டை தற்போது யூ பொங்லின் என்பவர் வசம் உள்ளது.இதை இன்னொருவர் வாடகைக்கு எடுத்து லவ் ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டலொன்றை நடத்தி வருகிறார்.

இந்த வீட்டை அரசிடம் ஒப்படைத்து நினைவிடமாக மாற்ற யூ முயன்றார். ஆனால் யூ போட்ட பல்வேறு நிபந்தனைகளை ஹொங்கொங் நிர்வாகம் ஏற்கவில்லை. இதையடுத்து நினைவிடமாக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வீட்டை விற்று விட முடிவு செய்துள்ளாராம் யூ.

இதுகுறித்து யூ கூறுகையில், 'இந்த கட்டிடத்தை அருங்காட்சியகமாக்கும் திட்டத்துக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. விடுதி நடத்துபவர்கள் 2 ஆண்டுகளாக வாடகை தரவில்லை. இதனால், வீட்டை 23 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .