Gavitha / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வியில் ஒரு முறை கோட்டை விட்டால், வாழ்க்கையே அவ்வளதுதான் என்று நமது பெற்றோர்கள் அடிக்கடி நம்மை திட்டித்தீர்ப்பதுண்டு.
அந்த வார்த்தையை இல்லாம் செய்யும் படியாக, படிக்காமலும் பட்டம் பெறலாம் என்று 97 வயதுடைய பாட்டியொருவர் நிரூபித்துவிட்டார். 79 ஆண்டுகளுக்கு முன்னர், உயர்நிலைக்கல்வியை கைவிட்ட பாட்டியே தனது 97ஆவது வயதில் அதே உயர்நிலைக்கல்வி பட்டத்தைப் பெற்று ஆச்சரியமூட்டியுள்ளார்.
1936ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரிலுள்ள ஒரு கல்லூரியில் உயர்க்கல்வியை தொடர்ந்துள்ளார். இவருடைய பெயர் மார்கரெட் தாமஸ் பெக்கெமா.
உயர்க்கல்வியை தொடர்வதற்கு வந்த முதல் வருடத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்காக, படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.
இந்நிலையில், இவரது நண்பர்களும் உறவினர்களும் சமீபத்தில் பாட்டி ஏற்கெனவே உயர்க்கல்வியை தொடர்வதற்காகச் சென்ற கல்லூரிக்கு அழைப்பை ஏற்படுத்தி, பாட்டியின் கதையை கூறியுள்ளனர்.
இந்நிலையில், உயர்நிலைக் கல்வியைக் கூட முடிக்க முடியாததால் வருத்தப்படும் பாட்டிக்காக, கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க அந்தப் கல்லூரி முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த 29ஆம் திகதி அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் அவர் இந்தப் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025