2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பிரபலமடைவதற்காக என்னை பற்றி வதந்தி பரப்புகின்றனர்: கமல் அத்தரஆரச்சி

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பெயரை பயன்படுத்தி பிரபலம் தேடும் சிலர் அரட்டை பத்திகளில் தன்னைக் குறிக்கும் ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை பரப்பி வருவதாக பல பரிசுகள் பெற்ற நடிகரும் பாடகருமான கமல் அத்தர ஆரச்சி இன்று கூறியுள்ளார்.

இந்த செய்தி எனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான மருத்துவ குளியல் (ஸ்பா) நிலையம் மீது பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை பற்றியது.

நான் எனது மனைவியுடன் வெளியே சென்றிருந்த போது எனது நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்து தனது வர்த்தக நிலையத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் தான் வெளியில் இருப்பதனால் என்னை அங்கு போய் விபரங்களை அறிந்து கூறும்படியும் கேட்டார். நான் எனது மனைவியுடன் அங்கு சென்றேன்.

விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொலிஸாரிடம் நான் பேசினேன். இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் அவர்களுடன் பிரச்சினை பற்றி மரியாதையுடன் கேடகும் உரிமை எனக்கு இருந்தது. நான் எனது நண்பனுக்கு விடயத்தை தெரிவித்தேன்.

இவ்வளவுதான் என்னோடு சம்பந்தப்பட்ட விடயம். நான் உடனேயே மனைவியுடன் வீடு திரும்பிவிட்டேன். ஆனால் இந்த சம்பவம் திரித்துக் கூறப்பட்டுள்ளது. ஏனையோரின் மீது சேறுபூச விரும்பும் சிலர் இதை பல விதமாக கூறித் திரிகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் என்னை பொலிஸார் ஒரு போதும் விசாரிக்கவில்லை. வாக்குமூலம் பெற முயலக்கூட இல்லை. சில சக்திகள் ஏன் தர்மத்தை மீறி எம்மீது சேறு பூசுகின்றனர்?' என டெய்லி மிரருக்கு கமல் தெரிவித்தார்.

பொறுப்பில்லாத இவ்வாறான செயல்கள் காரணமாக நானும் எனது மனைவியும் அனுபவிக்கம் துன்பமும் சோகமும் பயங்கரமானது. என்னிடம் ஒரு நல்ல வாழ்க்கைக்கு தேவையான பணம் உள்ளது. நான் சம்பாதிப்பதற்காக மெகா தொலைக்காட்சி நாடகங்களிலோ 'வயது வந்வர்களுக்கு மட்டும்' ரக படங்களிலோ நடிக்கப் போகவில்லை. எதைச் செய்தாலும் அதை தரமாக செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன். ஒரு வாண்மைத்துவ நடிகர் என்ற வகையில் நான் எனது கௌரவத்தை பேணி வருகிறேன் என கமல் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .