2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இளவரசி கேட்டின் டொப்லெஸ் புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் அரைநிர்வாண படங்கள் பிரான்ஸ் சஞ்சிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் விடுமுறையை கழிப்பதற்காக பிரான்ஸுக்கு சென்றபோது இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

இளவரசி அரை நிர்வாணக் கோலத்தில் காணப்படும் புகைப்படங்கள் மேற்படி சஞ்சிகையின் நான்கு பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இப்புகைப்படங்களானது நீண்ட லென்ஸ்களைக் கொண்ட கமெரா மூலம் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

தெளிவில்லாத நிலையில் காணப்பட்டாலும் இளவரசி கேட்டின் புகைப்படங்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது.

தற்போது இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் ஆசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் மலேசியாவின் கோலாம்பூர் நகரில் காலை உணவு உட்கொண்டபோது, இப்புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தமது தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடு என இப்புகைப்படங்கள் குறித்து மேற்படி தம்பதியினர் வருத்தமடைந்துள்ளனர்.

இப்புகைப்படங்களை பிரசுரிப்பதற்கு பிரித்தானிய பத்திரிகைகள் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மேலும் தமது 9 நாள் விடுமுறையை நீடித்துள்ள வில்லியம் மற்றும்  கேட் தம்பதியினர் இன்று கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலொன்றுக்கு இளவரசி கேட் சென்றமை இதுவே முதல் தடவையாகும்.


  Comments - 0

  • படிக்காதவன் Friday, 14 September 2012 09:33 AM

    காலில் போட்டிருக்கும் சப்பாத்தைக் காற்றி வைத்து விட்டு பல்ளி வாசலுக்குள்ளே போனதுக்கு உங்களுக்கு நன்றிகள். இளவரசரே.. இளவரசியே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .