2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நியூசிலாந்து செல்ல மைக் டைசனுக்கு தடை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நியூசிலாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கொன்றில் சிக்கிக்கொண்ட மைக் டைசன், அமெரிக்காவில் 6 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இதனால் குத்துச்சண்டைக் கழகம் அவரை தற்காலிகமாக நீக்கியது.
 
தற்போது விடுதலையாகியுள்ள அவர், நியூசிலாந்தில் ஒரு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவரை நியூசிலாந்துக்குள் செல்ல விசா கொடுக்க முடியாது என்று அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “மைக் டைசன் நியூசிலாந்துக்குள் நுழைந்தால் அவரை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும். அதனால் அவர் நியூசிலாந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .