2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

சிற்றிடை அழகியாக இங்கிலாந்து நெரினா

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் சிற்றிடை கொண்ட பெண் என்ற பெருமையை இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயதான நெரினா ஆர்டன் என்பவர் பெற்றுள்ளார்.

இந்தப் பெண் தனது இடையின் அளவை கார்செட் எனப்படும் விசேட உடையை அணிந்து அதன் மூலம் குறைத்துள்ளாராம். தொடர்ந்து கார்செட்டை  அணிந்து இப்படி குறுகிய இடையைப் பெற்றுள்ளாராம் நெரினா. 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இவரது இடையின் அளவு 15.7 அங்குலம் ஆகும். அதாவது 39.9 சென்ரிமீற்றர் ஆகும். 

இந்த அளவு போதாது என்றும் இன்னும் சுருங்கச் செய்து 14 அங்குலம் என்ற அளவுக்கு தனது இடையைச் சுருங்கவைக்கப் போவதாகவும் இவர் கூறியுள்ளார்.

இவர் தற்போது உலக சாதனையையும் நெருங்கி வருகிறார்.

தற்போது உலக சாதனை படைத்த கின்னஸ் இடைக்குச் சொந்தக்காரராக அமெரிக்காவின் கேத்தி ஜங் உள்ளார். அவரது இடை அளவு 15 அங்குலமே ஆகும்.(தட்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .