2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

உலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கிய விஞ்ஞானி மரணம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை (செம்மறியாடு) உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் கீத் கேம்பல் தனது 58ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு குளோனிங் முறை மூலம் முதன் முதலில் டோலி என்ற செம்மறியாடு உருவாக்கப்பட்டது.

முதலில் சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பின்னர் வாடகைத்தாய்க்கு மாற்றப்பட்டு, 1996ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி பிறந்தது.

டோலியின் உருவாக்கத்தில் தலைமை வகித்த லான் வில்மட் என்பவர்தான் இந்த செம்மறியாட்டின் படைப்பாளி என அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கீத் இறந்த தகவலை எடின்பர்க் பல்கலைக்கழக தகவல்கள் உறுதி செய்துள்ளன. தனது சோதனையில் 66 சதவீத பங்களிப்பை அளித்தவர் பேராசிரியர் கீத் கேம்பல் என, கீத் பற்றி வில்மட் குறிப்பிட்டுள்ளார்.

1991 முதல் 1999ஆம் ஆண்டு வரை கீத் அந்த சோதனைக்கூடத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் மேம்பாட்டு துறையின் பேராசிரியராக கீத் பணிபுரிந்துள்ளார்.

டோலியின் உருவாக்கத்திற்குப் பின்னர் வெகு விரைவிலேயே பன்றி, ஆடு, குதிரை, நாய் மற்றும் பூனை போன்ற உயிரினங்கள் குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

டோலியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கான மறுசந்திப்பு நிகழ்ச்சி ஒன்று கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் கீத் கேம்பல் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • JAN Thursday, 11 October 2012 11:25 PM

    6:143. "(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி (தடுத்து) விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக". ஆல் குர்ஆன்.

    35:11. "அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய (ஆயுல்) வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து (ஆயுல்) குறைப்பதும் (அல்லஹ்வின் லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்" ஆல் குர்ஆன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .