2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

சச்சினுக்கு 'ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா' விருது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருதொன்று வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 'ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா' என்ற உயரிய விருது வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்திரேலியா அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது அபூர்வமானது. இந்த விருதை பெறும் 2ஆவது இந்தியர் டெண்டுல்கர் ஆவார். இதற்கு முன்பு இந்தியாவின் முன்னாள் சட்டமா அதிபர் சோலிப் சொரப்ஜி இந்த விருதைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரான சைமன், இந்தியா செல்லும்போது டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை பெறும் 3ஆவது கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்பு 1985ஆம் ஆண்டு கிளைவ் லொயிடும், 2009ஆம் ஆண்டு பிரைன் லாராவும் இந்த விருதைப் பெற்றனர். சச்சின் டெண்டுல்கர், 190 டெஸ்ட் போட்டிகளில் 15,533 ஓட்டங்களையும் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மாலைமலர்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .